திருமணங்களில் தான் தரத்தை குறைத்து நடனம் ஆட மாட்டேன் என்று நடிகை கங்கனா ரனாவத் கூறி இருப்பது சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றது.
சர்ச்சை நாயகி
2008 ஆம் ஆண்டு வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ஏ.எல். விஜய் இயக்கத்தில், தலைவி படத்தில் கங்கனாவுடன் இணைந்து அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய கங்கனா நெப்பாடிசம் மட்டுமில்லாமல், பல சர்ச்சையான அரசியல் சார்ந்த கருத்துக்களையும் வெளியிட்டு வருவார். சோசியல் மீடியாக்களில் சர்ச்சை நாயகியாக இருந்து வரும் நடிகை கங்கனா தற்போது திருமணத்தில் நடனமாடுவது கருத்து ஒன்றை பற்றி பதிவிட்டுள்ளார்.
தரத்தை குறைக்க மாட்டேன்
சமீபத்தில் கங்கானாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கங்கனா. அதனை பார்த்த ரசிகர்கள் பல கோடிகளுக்கு அதிபதியான பிறகும் கங்கனாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கிறார். மிகவும் எளிமையானவர் என பதிவிட்டனர். இதற்கு கங்கனா பதிலளித்ததாவது; “என் சம்பாத்தியத்தினால் எனது தாயார் செல்வந்தராகவில்லை. என்னுடைய குடும்பத்தில் அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் பலர் இருக்கின்றனர். என் அம்மா 25 வருடங்களுக்கும் மேல் டீச்சராக பணியாற்றியவர். சினிமா மாபியா மீது நான் இந்த அளவுக்கு ரியாக்ட் ஆகும் விதத்திற்கு காரணம் என் அம்மா தான். இதன் காரணமாகதான் சில நடிகர்களை போல் நான் திருமணங்களில் தரத்தை குறைந்து டான்ஸ் ஆடமாட்டேன்” என்று கூறினார்.
திருமணத்தில் நடனம்
சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில் நடிகர்கள் சல்மான்கான், அக்ஷய்குமார் இணைந்து மேடையில் நடனம் ஆடினார்கள். இது சம்பந்தப்பட்ட வீடியோ வைரலாகியது. ஆகவே இதனை மனதில் வைத்துகொண்டு தான் நடிகை கங்கனா அவர்களை விமர்சித்து இவ்வாறு பேசியுள்ளார் என்று கருத்துக்கள் நிலவுகிறது.