கூகுள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

நீக்கம்

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் அளவிற்கு வெளியேற்றி வருகின்றன. மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

ஊழியர் உருக்கம்

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய் வர்கியா என்பவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கி உள்ளது. சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய அவரை பணியில் இருந்து கூகுள் நீக்கியது தொடர்பாக, ஹர்ஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஏன்?” “திறமைக்கு இடம் இல்லையா…?” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here