சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் முதல் பாடலான சீன் ஆ.. சீன் ஆ.. பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

நல்ல வரவேற்பு
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடலான “சீன் ஆ.. சீன் ஆ..” பாடல், சமீபத்தில் வெளியானது. மாவீரன் படத்தை இயக்குகிறார் மடோன் அஸ்வின். ஏற்கனவே இவர் இயக்கிய மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடந்து கொண்டிருக்கின்றது. மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர், மாவீரன் படத்திற்கும் இசையமைக்கிறார். இவரது இசையில் முதன்முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடலான “சீன் ஆ.. சீன் ஆ” தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
கலைஞர்களுக்கு நன்றி
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சில படங்கள் போதிய வரவேற்பு பெறாத நிலையில், மாவீரன் திரைப்படம் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தின் சீன் ஆ.. சீன் ஆ பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக, நடன கலைஞர்கள் சங்கம் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் 7 மில்லியன்களுக்கு மேல் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.















































