சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆனந்த ராகம் தொடர் மராத்தி மொழியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
மராத்தியில் தமிழ் தொடர்
ஒரு தொடர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தால் அதனை வேறு மொழியில் ரீமேக் செய்வதும் அல்லது டப்பிங் செய்வதும் உண்டு. அந்த வகையில் பல ஹிந்தி தொடர்களை ரீமேக் செய்து தற்போது பல டிவி சேனல்களில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆனந்த ராகம் என்ற தொடர் மராத்தி மொழியில் ரீமேக் செய்யப்படுகின்றது.
ரீமேக் தொடர்
மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஆனந்த ராகம் தொடரும் ஒன்று. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருக்கும் இந்த தொடரில், “அழகு அறிவு நிறைந்த இளம் பெண் பணக்கார குடும்பத்தில் பணிபுரிவதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்துக்கு எந்த வகையில் எல்லாம் உதவியாக இருக்கிறார்” என்பதை மையமாக வைத்து ஆனந்த ராகம் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் அனுஷா பிரதாப் – அழகப்பன் ஆகியோர் ஈஸ்வரி மற்றும் அழகு சுந்தரம் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் பிரதீப் சஞ்சய், சிவகுமார், ஸ்வேதா, செந்தில்குமார், இந்து கௌத்ரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆனந்த ராகம் தொடர் தற்போது மராத்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 20 முதல் சன் மராத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சரிகா நவாதே, அபிஜித் சாவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.