கொரியன் மற்றும் தாய்லாந்து நடிகர்களுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தெலுங்கில் முன்னணி
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா, டியர் காம்ரேட், புஷ்பா போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். தெலுங்கில் பிரபலமாக இருந்து வந்த இவருக்கு, ரசிகர்கள் பட்டாளமே உருவானதால், தமிழில் எப்பொழுது என்ட்ரி கொடுப்பார் என்று காத்துக் கொண்டிருந்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். அந்த சமயத்தில் தான் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
ஷூட்டிங் பிஸி
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதில் இடம் பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு, குட் பை என்ற படத்தின் மூலம் ஹிந்திலும் அறிமுகமானார். தற்போது மிஷன் மஜ்னு என்ற படமும் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபலமாகி வரும் நடிகை ராஷ்மிகா, அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் புஷ்பா பாகம் இரண்டு பாடத்திலும் நடித்து வருகிறார். 
வைரல் புகைப்படம்
ராஷ்மிகாவுக்கு தொடர்ந்து பல சர்வதேச விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அப்படி சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ராஷ்மிகா. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட தென் கொரிய நடிகர் ஜங் வூ மற்றும் தாய்லாந்து நடிகர் கனாவட் ட்ராய்பிபட்டனோபோங் ஆகியவருடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.















































