ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது 30 சதவிகித ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என அறிவித்துள்ளது.
கிடையாது
இதுதொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது; “தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த ஆக்கத்தோடு பணி செய்ய வைப்பதை நிறுவன மேலாண்மை கவனத்தில் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் ஊதிய உயர்வானது இந்த ஆண்டு 30 சதவிகித ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பாதிப்பு
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், அதில் பணியாற்றும் 4,500 ஊழியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. பல்வேறு பொருளாதார காரணிகள் காரணமாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது பணி பலத்தை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.