ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடன இயக்குநரான பாபா பாஸ்கர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
மில்லியன் ஃபாலோவர்ஸ்
வெள்ளித்திரை நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகர்களுக்கும் மவுசு ஏறிக்கொண்டே போகிறது. சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளனர். பல அப்டேட்டுகளை சுடச்சுட வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசத்தில் வைத்துள்ளனர் சின்னத்திரை நடிகர்கள்.
கவரும் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்த தொடர் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது சீதாராமன் தொடர் அதே நேரத்தில் ஒளிபரப்புவதால், நினைத்தாலே இனிக்கும் தொடரின் ஒளிபரப்பு நேரத்தை 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. நினைத்தாலே இனிக்கும் தொடரில் ஸ்வேதா சர்மா மற்றும் ஆனந்த் செல்வம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சீரியலில் என்ட்ரி
எப்பொழுது சீரியலின் ப்ரோமோ வரும் என்று ஒரு ரசிகர் கூட்டம் அதற்காகவே காத்துக்கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும் ப்ரோமோ வீடியோவில் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார். வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் சிறப்பு தோற்றத்தில் சீரியல்களில் தோன்றுவதுண்டு. அதேபோல் பாபா பாஸ்கரும் இந்த தொடரில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இவர் பல நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றதும், குக் வித் கோமா நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.