நடிகர் விஜய் சேதுபதி டயட் பற்றி பேசி இருப்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
பிளாக் பஸ்டர் படங்கள்
தமிழில் தற்போது முன்னணி நடிகராக இருக்கக்கூடிய விஜய் சேதுபதி. உணவுப் பிரியர் என்று தெரிந்தவுடன் ஃபுட்டீஸ் அனைவரும் இவரைக் கொண்டாட தொடங்கி விட்டனர். தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார். சேதுபதி, நானும் ரவுடி தான், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என்று அடுத்தடுத்து படங்களில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
ஹீரோ, வில்லன்
ஹீரோவாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் அனைவரின் மனதை கொள்ளை கொண்டவர். விக்ரம் வேதா படத்தில் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த வேதா என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 96 படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது, அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பால் இன்று முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.
டயட் இருக்க மாட்டேன்
நடிகர் விஜய் சேதுபதி டோலிவுட், பாலிவுட் என்று அடுத்தடுத்து தனது நடிப்புத் திறமையால் முன்னேறி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஃபர்ஸி என்ற வெப் சீரிஸ் வெளியானது. போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்னுடன் ஜவான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஃபர்ஸி வெப் சீரிஸ்க்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி பேசிய சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ருசிச்சு சாப்பிடுங்க
அவர் எப்பொழுதும் தனது எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவர்வார். அதேபோல் இந்த முறை இவர் பேசியது வைரலாக பரவி வருகின்றது. னடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது; “சாப்பாட்டில் டயட் இருப்பது எனக்கு நம்பிக்கை இல்லை. எப்போதுமே சுவையான உணவை மட்டுமே சாப்பிட விரும்புகிறேன். ஒருவர் சுவையான சாப்பாட்டை சாப்பிடாவிட்டால் அவரது வாழ்க்கையில் சுவை இருக்காது. குறைந்த கலோரி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இல்லாமல் நல்ல உணவை சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட வேண்டும்” என்றார். இவர் இப்படி கூறி இருப்பது ஃபுட்டீஸ்க்கு ஆறுதலாக இருக்கின்றது.