உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பிரபு சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கலக்கல் படங்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரபு தற்போது பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.

சிகிச்சைக்கு பிறகு நலம்

வீட்டிலிருந்த நடிகர் பிரபுவிற்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோடம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக கற்கள் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் உடனடியாக அவற்றை அகற்ற முடிவு செய்துள்ளனர். பிறகு லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது. அத்துடன் நடிகர் பிரபு நலமுடன் இருப்பதாகவும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 1982ல் சினிமாவில் அறிமுகமான நடிகர் பிரபு ரஜினி, கமல், சூர்யா, விஜய் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். பிரபுவிற்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்தவுடன், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். தற்போது அவர் நலமுடன் இருக்கும் செய்தி அனைவரையும் பெருமூச்சு விட வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here