கிறிஸ்டி பட ப்ரோமோஷன் காரணமாக தனது டுவிட்டரில் பெயரை மாற்றி உள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

கிறிஸ்டி ப்ரோமோஷன்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை மாளவிகா மோகன, கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது.

பெயர் மாற்றம்

மலையாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதாநாயகியாக நடித்துள்ள கிறிஸ்டி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மேத்யூ தாமஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் மேத்யூ தாமஸ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக கிறிஸ்டி படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மாளவிகா மோகனன் திரிஷாவின் பாணியை பின்பற்றியுள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் போது தனது டுவிட்டரின் பெயரை குந்தவை என்று த்ரிஷா மாற்றிக் கொண்டார். அதேபோல் கிறிஸ்டி படத்தின் ப்ரோமோஷன் காரணமாக மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பெயரை கிறிஸ்டி என்று மாற்றியுள்ளார். இந்த பெயர் மாற்றம் குறித்து டுவிட்டரில் பல கிசுகிசுக்கள் பகிரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here