அமெரிக்காவில் திடீரென அத்துமீறிய நபரை இளம்பெண் ஒருவர் புரட்டி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திடீர் தாக்குதல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நஷாலி அல்மா (24). பிட்னஸ் மாடலாக உள்ள இவர், சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர். கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று, நஷாலி அல்மா தம்பாவில் உள்ள இன்வுட் பார்க் அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சேவியர் தாமஸ் ஜோன்ஸ் எனபவரை அவரை தாக்கி உள்ளார். நஷாலி அப்போது பதட்டப்படாமல் பயப்படாமல் தாக்குதல் நடத்தியவரிடமிருந்து தைரியமாக தன்னைத் தற்காத்துக் கொண்டார்.

மிரண்டு ஓடிய நபர்

இதனை தொடர்ந்து குற்றவாளி மற்றொரு பெண்ணை பழிவாங்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். நஷாலியை அந்த அன்பர் தொடர்ந்து தாக்க முற்பட்டபோது, அவர் தொடர்ந்து போராடுகிறார். சிறிது நேர சண்டைக்குப் பிறகு, அவரது துணிச்சலைக் கண்டு தாக்கியவர் ஓடிவிடுகிறார். இதுகுறித்த வீடியோவை ஹில்ஸ்பரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here