சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் முதல் பாடலான “சீனா..சீனா”அவரது பிறந்த நாள் பரிசாக இன்று வெளியாகி உள்ளது.

நல்ல வரவேற்பு
யோகி பாபுவின் மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின், தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை இயக்குகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர், மாவீரன் படத்திற்கும் இசையமைக்கிறார். இவரது இசையில் முதன்முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சமீப காலமாக இந்த பாடல் மீது மிகுந்த ஆர்வம் நிலவி வந்த நிலையில், இன்று பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மண்டேலா படம் போல் மாவீரன் திரைப்படமும் அரசியல் சார்ந்த படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கோடை விடுமுறையில் இந்த படம் வெளிவர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, மாவீரன் படத்தின் டைட்டில் அனௌன்ஸ்மென்ட் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
அனிருத் குரல்
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், மாவீரன் திரைப்படம் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அருனித் பாடியுள்ள மாவீரன் படத்தின் சீனா.. சீனா… பாடல் இன்று வெளியானது. இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அயலான் திரைப்படமும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் உள்ளது. அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.















































