நியூசலாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மோசமான உயிர்பலி
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.5ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து சரிந்ததுடன், பல பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்தன. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சம்
இந்த நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.1ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் அச்சமடைய வைத்துள்ளது.