பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘லவ் டுடே’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், நடிகை இவானா, இசையமைப்பாளர் யுவன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் சதீஷ், ஜி.பி.முத்து ஆகியோர் பங்கேற்றனர். நடிகை இவானா மேடையில் பேசுகையில், “படக்குழுவுக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கை இப்போது வேறுமாதிரி செல்கிறது. பிரதீப் ரங்கநாதனை இயக்குநராகவும், நடிகராகவும், நண்பராகவும் பிடிக்கும். பிரதீப் ரங்கநாதன் என்றாலே சிறப்புதன்” என்றார்.