காதலை மையப்படுத்தி தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் பல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன.
காதலித்துப்பார் கவிதை வரும்
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படும் இந்நாள் காதலர்களுக்கு தனி ட்ரீட் தான். “காதலித்துப்பார் உனக்கும் கவிதை வரும்” என்பது கவிஞர் வைரமுத்துவின் வரிகள். காதலை உணர்ந்தால் மட்டுமே உலகம் அழகாகும். அந்த வகையில் காதலை உணர்ந்த பல தமிழ் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில படங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
காதல் கோட்டை
பார்த்து, பழகி வரும் காதல் எல்லாம் ஒரு ரகம். பார்க்காமலேயே காதல் வரும் என்று கூறிய படம் தான் காதல் கோட்டை. காதல் என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும் திரைப்படம் இது. அஜித், தேவயானி இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். ஒருவர் மீது காதல் வருவதற்கு அழகு முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த படம் தான் இது. இன்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நிலையான இடத்தை பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
காதலுக்கு மரியாதை
விஜய், ஷாலினி இணைந்து நடித்த இந்த திரைப்படம். எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத படமாக இருந்து வருகிறது. குடும்பத்திற்காக காதலை இழப்பதா, அல்லது காதலுக்காக குடும்பத்தை இழப்பதா என்று தடுமாறும் மனதில் இருக்கும் பாச போராட்டமே இந்த படம். பல போராட்டத்திற்கு நடுவில் சிக்கித்தவிக்கும் காதலர்களின் மனநிலையை, எதார்த்தமாக உண்மையான காதலை காட்டி இருப்பார் இயக்குநர். காதலை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்தாலும், நம் நினைவுக்கு முதலில் வருவது இந்த படங்கள் என்பதை மறுக்க முடியாது.