ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கிறிஸ் பிராட் நடிப்பில் உருவாகியுள்ள கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் வால்யூம் 3 படத்திற்கான டிரைலர் வெளியாகி உள்ளது. 
ஹிட்டான 2 பாகங்கள்
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியான, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இறுதி பாகம், வரும் மே மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. எண்ட் கேம் சம்பவத்திற்கு பின் காணாமல் போன கமோரா கதாபாத்திரத்தை தேடி கண்டுபிடிப்பதோடு, ராக்கெட் கதாபாத்திரத்திரம் உருவாக்கப்பட்ட இடத்திற்கு செல்வது ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆவலுடன் எதிர்பார்ப்பு
கடைசி பாகமான இந்த திரைப்படத்தில் கார்டியன்ஸ் குழுவை சேர்ந்த யாரேனும் ஒருவர் நிச்சயமாக, தங்களது நண்பர்களுக்காக உயிர் தியாகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. முதல் டிரைலர் வெளிவந்த போது டிராக்ஸ் அல்லது ராக்கெட் கதாபாத்திரத்தில் யாரேனும் ஒருவர் பலியாவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டாவது டிரைலரை பார்க்கும்போது டிராக்ஸ் மற்றும் ராக்கெட் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களுமே கொல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கடைசி பாகம் என்பதால், இதனை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.















































