நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலானதால் அப்படக்குழிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெற்றி கூட்டணி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் விஜய்க்கு மட்டும் இல்லாமல் த்ரிஷாவுக்கும் 67வது திரைப்படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஏற்கனவே இணைந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
திரும்பிய திரிஷா
அதன்பிறகு லோகேஷ் இயக்கிய விக்ரம் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடப்பதால் பட குழுவினர் அனைவரும் காஷ்மீருக்குச் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. தனது பாகத்தை மட்டும் முடித்துவிட்டு விரைவாகவே சென்னை திரும்பினார் நடிகை திரிஷா. லியோ படத்தில் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லியோ படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ஷேர் செய்து இருந்தார்.
வீடியோ லீக்
இந்நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சுமார் 8 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ ஷேர் செய்த சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டு விட்டாலும், சமூக வலைதளத்தில் அது வைரலாக பரவி வருகின்றது. ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டிருக்கும் நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்று தெரியாமல் படக்குழுவினர் குழம்பி வருகின்றனர்.