நடிகை நயன்தாராவுக்கும், தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர்மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும் நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டி ப்ரோமோஷன்
பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை மாளவிகா மோகன், தற்போது கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பிரச்சனை
தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாராவுக்கும், மாளவிகா மோகனனுக்கும் பல பிரச்சனைகள் என்று சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. அதாவது நயன்தாரா நடித்த ஒரு மருத்துவமனை காட்சியில் மேக்கப் போட்டு, தலை சீவி இருந்தார். இந்த காட்சியை நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில், அது எப்படி மருத்துவமனையில் இருக்கக்கூடிய நோயாளி ஃபுல் மேக்கப்புடன் இருக்க முடியும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக நயன்தாரா பேட்டி ஒன்றில், மருத்துவமனையில் நோயாளியாக இருந்தாலும், அவரைப் பார்த்துக் கொள்பவர்கள் தலை சீவியும், அவர்களை பராமரித்து கொள்வதும் இயற்கையான ஒரு விஷயம் தான். அதைத்தான் நாங்கள் காட்சிப்படுத்தினோம். அதை வேறொரு நடிகை குற்றமாக சொல்வது முற்றிலும் தவறு என்று கூறியிருந்தார்.
மதிப்பு, மரியாதை
இருவர்களுக்கும் ஏற்கனவே சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், தற்போது மாளவிகா மோகனன் கிறிஸ்டி படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றபோது, லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காமல் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாம் என்று மாளவிகா கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தாலே போதும் என கூறியிருந்தார். இதை கேட்ட ரசிகர்கள், ஏற்கனவே நயன்தாராவுக்கும் மாளவிகா மோகனனுக்கும் ஒத்து வராது, அதனால் தான் இவர் இந்தக் கேள்விக்கு இப்படி ஒரு பதில் கூறியுள்ளார் என்று கமெண்ட் செய்து வந்தனர். இதை பார்த்த மாளவிகா தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். “நான் எந்த ஒரு நடிகையும் குறிப்பாக கூறவில்லை, நான் நடிகை நயன்தாரா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஒரு சீனியராக அவரது அசாத்தியமான இந்த பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன்” என்று ஹார்டினுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்.