ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுத்த அசாம் அரசுக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்
பிரபல ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ, சமூக ஆர்வலராகவும் உள்ளார். இவர் தனது பவுண்டேஷன் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றார். அந்த வகையில், அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக அவர் பல கோடிகளில் செலவு செய்து வருகிறார்.
பாராட்டிய ஹீரோ
அசாமில் அதிகளவில் அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு, அதன் கொம்புகள் வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. சமீப காலமாக அந்த மிருகங்கள் வேட்டையாடப்படுவது குறைந்து வந்துள்ளது. இதனை அறிந்த நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, அசாம் அரசை பாராட்டி உள்ளார்.
முடிவுக்கு வந்தது
இதுகுறித்து லியோனார்டோ டிகாப்ரியோ கூறும்போது, “அசாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு காப்பகத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை சுமார் 190 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டன. இப்போது அம்மாநில அரசு வேட்டையாடுவதை முடிவுக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது” என்று கூறியுள்ளார். இதனையறிந்த அசாம் முதல்வர் சுமந்தா பிஷ்வா ஷர்மா, காசிரங்கா தேசிய பூங்காவை வந்து பார்வையிடுமாறு லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.