சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்த நடிகை விஜயசாந்தி தான் வாங்கிய சம்பளம் குறித்த விவரங்களை கூறியிருக்கிறார்.
பல மொழிகளில் டாப்
1980 இல் கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை விஜயசாந்தி. அதன்பிறகு ராஜாங்கம், நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 1980, 90களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்த அவர், 1983ல் கன்னட படங்களிலும் நடிக்கத் துவங்கினார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த விஜயசாந்தி “ஈஸ்வர்” என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார்.
சினிமா, அரசியல்
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு நடித்த மன்னன் திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார் விஜயசாந்தி. மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த விஜயசாந்தி, 2006 ஆம் ஆண்டு நாயுடு அம்மா என்ற தெலுங்கு படத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன்பிறகு அரசியலுக்கு சென்ற அவர், 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடித்தார்.
சரிசமமாக சம்பளம்
பல வருடங்களாக சினிமா துறையில் வெற்றிகரமாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி, சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது பெற்ற சம்பளத்தின் விவரத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “நான் அனைத்து மொழியிலும் நடிக்கின்றேன். அதிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிகம் நடிக்க பிடிக்கும். நான் சினிமாவில் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 3000 ரூபாய். அப்போது இருந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நானும் இருந்தேன்” என்றார். அதாவது ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுக்கு சரிசமமாக விஜயசாந்திக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மிகவும் தைரியமாக போலீஸ் கதாபாத்திரங்களிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்த விஜயசாந்தி, மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினால் ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது நிச்சயம்.