இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற மகிழ்ச்சியில் நடனமாடும் நடிகை வரலட்சுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிஸியான வரலக்ஷ்மி
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “போடா போடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பிறகு தாரை தப்பட்டை, சண்டைக்கோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2 போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா திரைப்படம் மிகவும் பிரபலமானது. நேற்று (பிப்.,03) திரையரங்குகளில் வெளியான மைக்கேல் திரைப்படத்திலும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலக்ஷ்மி . தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மகிழ்ச்சியில் குத்தாட்டம்
அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வரலஷ்மி, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இதில் சமீபத்தில் அவர் டான்ஸ் ஆடி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது மட்டுமில்லாமல் அதற்கான காரணத்தையும் வரலக்ஷ்மி கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோயர்கள் வந்ததை கொண்டாடும் விதமாக டான்ஸ் ஆடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “என் மீது பொழிந்த அன்பிற்கு மிகவும் நன்றி! இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் என்பதை கேட்டவுடன் நான் சிரித்து மகிழ்வதை பார்க்கவே இந்த டான்ஸ் ஆடுகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் உங்கள் அனைவருடனும் நான் மேலும் நெருக்கமாக இருப்பதாகவும் உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்”, என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வரலஷ்மிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.