தமிழில் உருவாக இருப்பதாக கூறப்படும் திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாவதாக வெளியான செய்திக்கு அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஹிட் திரைப்படம்

2010 ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘பையா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் திட்டத்தில் லிங்குசாமி இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆக்ஷன், திரில்லர், ரொமான்ஸ் என்று கலந்து ஹிட் கொடுத்த, ‘பையா’ படத்திற்கு, இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றது.

2-ஆம் பாகம்

‘பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தது. இந்த தகவல் வெளிவந்தவுடன் ஆர்யா, ஜான்வி கபூர் ஜோடி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது ரேட்டிங்கை வெளியிட்டு வந்தனர்.

மறுப்பு

ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிப்பது உண்மையாக இருந்தால், இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான் என்று கூறி வந்த நிலையில், ஜான்வி கபூரின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தனது மகள் எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவில் கூறியிருப்பதாவது; “என் மகள் எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதுபோன்ற தவறாக செய்திகளை பரப்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here