நடிகர் விஜய்க்கு கூறிய கதை அவருக்கு மட்டும் தான் வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன் என நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

நாயகன்

இதுதொடர்பாக அவர் பேசியதாவது; நான் ‘எல்.கே.ஜி’ ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும். யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. பார்வையாளர்களுக்கு முன் நான் விழிப்புணர்வாக இருந்தால் தான் உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கும்போது தான் ‘ரன் பேபி ரன்’ பட வாய்ப்பு வந்தது. ஆர்.ஜே.பாலாஜியா? இவர் எப்போதும் நகைச்சுவை படம் தான் எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது. என்னை நாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான் வர வேண்டும். இந்த கதை கேட்கும்போது அதுதான் தோன்றியது. ஒரு வருடம் முன்பு, நான் கதை கேட்கும் முன்பே படப்பிடிப்பிற்கு செல்லும் அளவு அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்த கதை கேட்டு பிடித்து சம்மதம் சொன்னதும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம். அதேபோல், இயக்குநர் என்ன கதை கூறினாரோ? அதை அப்படியே தான் எடுத்திருக்கிறார்கள்.

யூகிக்க முடியாது

‘வீட்ல விஷேசங்க’ படத்தில் நெருக்கமான காட்சி இருக்காது. அந்த காட்சியை திட்டமிடும்போதே நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால், ‘ரன் பேபி ரன்’ படத்தில் கண்ணியமான காதல் காட்சிகள் இருக்கும். செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடித்தினோம். ஒரே அறையில் நடக்கும் திரில்லராக இல்லாமல், பல இடங்களில் நடிக்கும் விதமாக இருக்கும். பூவிழி வாசலிலே படத்தின் கதையை முன்பே எப்படி கூற முடியாதோ, அப்படித்தான் இந்த படத்தின் கதையையும் கூற முடியாது. ஆனால், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

சிரிச்சிட்டாரு!

கடந்த வருடம் ஜனவரி 27-ம் தேதி நடிகர் விஜய் கதை கேட்க அழைத்தார். 40 நிமிடங்கள் ஆனது. நன்றாக சிரித்துவிட்டு, உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி விடலாமா? என்று கேட்டார். வீட்ல விஷேசங்க படத்திற்கே 5 மாதங்கள் ஆனது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும் சரி என்றார். இதற்கிடையில் அவருக்கு ஏற்ற வகையில் வேறு ஏதேனும் கதை தோன்றினாலும் கூறுவேன். ஆனால், அவருக்கு கூறிய கதை அவருக்கு மட்டும் தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன். இவ்வாறு ஆர்.ஜே. பாலாஜி கூற்யிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here