இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் Meta-வின் #1MinMusic பிராபர்டியின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.அமீனின் இசை அமைப்பில் வெளியான ”அடியே சோனாலி” பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

‘‘அடியே சோனாலி’

கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களை ரீல்ஸில் பாடல்களை உருவாக்கி வெளியிடவும், தளத்தில் அந்த பாடல் வேகமாக வைரல் ஆகும் போது அவை பார்வையாளர்களால் அதிகமாக கண்டறியப்பட்டு பாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் வாய்ப்பை அந்த பாடலுக்கு வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் meta கடந்த ஆண்டு #1MinMusic என்ற புதிய மியூசிக் ப்ராபர்டியை வெளியிட்டது. இந்த மியூசிக் ப்ராபர்டியில் தங்கள் இசையை வெளியிட்ட கலைஞர்களில் ஜி.வி.பென்னி தயால் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் அடங்குவர். இப்பொழுது, அமீன் தனது இசையில் உருவான முதல் பாடல் ‘‘அடியே சோனாலி’யின் புதிய டிராக்கை #1MinMusic-ல் வெளியிட்டுள்ளார். பாடல் வரிகளை அவரது தந்தை, புகழ்பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் குட்டி ரேவதி ஆகியோர் எழுதியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘‘அடியே சோனாலி’ பாடல் வெளியாகி இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

எதிர்பார்க்கிறேன்

இதுதொடர்பாக ஏ.ஆர். அமீன் கூறுகையில்; “அதிகளவில் ரீல்ஸில் இசையானது கண்டெடுக்கப்பட்டு, இன்ஸ்டாகிராமில் உள்ள படைப்பாளிகள் மற்றும் மக்களால் அவர்களின் உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இசை எப்போதுமே மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. ஆனால், இது இப்போது குறுகிய வடிவ வீடியோ பிளாட் ஃபார்ம்களுடன் இணைந்துள்ளதால், அவர்கள் அதில் அதிகமாக ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். #1MinMusic Meta உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் ரீல்களில் ‘அடியே சோனாலி’ பாடலைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

மகிழ்ச்சி

ஃபேஸ்புக் இந்தியாவின் meta உள்ளடக்கம் மற்றும் சமூகக் கூட்டாண்மைகளின் இயக்குநர் பராஸ் ஷர்மா கூறுகையில்; “ஏ.ஆர். அமீன் பாடல் எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமீன் எங்கள் #1MinMusic சொத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது திறமையை அனுபவித்து உணர்ந்து, அவற்றை தங்கள் ரீல்ஸ்களில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here