தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருவபர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான சோகெல் கதூரியாவை காதலித்து வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் மாதம் அவரை திருமணம் செய்துகொண்டார். ஜெய்பூர் முண்டேடா அரண்மனையில் இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக நடிகை ஹன்சிகா இன்று தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வருகை தந்த அவர் நிருபர்களிடம் பேசியதாவது; “தமிழ்நாட்டிற்கு வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வு. திருமணத்திற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.