பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்வேன் என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சோனியா அகர்வால், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான செல்வராகவனை கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்த அவர்கள், அதற்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார் சோனியா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ல் செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை சோனியா அகர்வால், தற்போது குணசித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காத்திருக்கிறேன்

சோனியா அகர்வாலும் மறுமணத்துக்கு தயாராவதாக அவ்வப்போது வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. பாடகர் எஸ்.பி.பி.சரணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரை சோனியா அகர்வால் மணக்க இருப்பதாகவும் பேசப்பட்டது. தற்போது அதற்கு நடிகை சோனியா அகர்வால் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; “ஒரு தொடரில் நானும், எஸ்.பி.பி.சரணும் நடித்த திருமண காட்சி புகைப்படம் வெளியாகி, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்தியை பரப்பினர். எனக்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன். எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்து இருக்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here