தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சமந்தா தொடர்பான செய்திகள் சமீபத்தில் அதிகளவில் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது. அந்த வகையில் தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
                














































