நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு தங்கை அக்ஷரா ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
தனித்திறமை
‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்திலும் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 
சிறந்த எடுத்துக்காட்டு
இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஸ்ருதிஹாசனின் தங்கையும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் அவர் பதிவிட்டுள்ளதாவது; “ஒரு பெண்ணாக எப்பொழுதும் எனக்கு பின் நின்றிருக்கிறார். எனக்கு இவரும் ஒரு சூப்பர் ஸ்டார். அக்காவாக இருப்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எனது பிரியமுள்ள அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு, அக்கா ஸ்ருதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அக்ஷரா பகிர்ந்துள்ளார்.















































