‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் 2 சிறுவர்களுக்கு தாய் வேடத்தில் துணிச்சலாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் தேசிய விருதும் பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது; ”கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை” என்று கூறினார்.