நடிகை திரிஷா நடிப்பில் உருவான ‘ராங்கி’ திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின், புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரிஷாவிடம், திரிஷா – நயன்தாரா இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து கூறி வருவது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை திரிஷா, இந்த ஒப்பீடு நல்ல விஷயம் தான் என்றார். அதேசமயம் தனக்கு பிடித்த ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவரை அவமரியாதை செய்து பேசக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.