பிரபல இயக்குநர் அட்லீ கடந்த 2014-ம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அட்லீ அறிவித்திருந்தார். இதனை அறிந்த திரைப்பிரபலங்களும், ரசிகர்கள் அட்லீ – பிரியா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் பிரியாவிற்கு சூப்பராக வளைகாப்பு நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்ளங்களில் வேகமாக பரவி வருகிறது.