உலக மல்யுத்த போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ள விளம்பர படத்தில் மல்யுத்த வீரருடன் இணைந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மல்யுத்த வீரருடன் கார்த்தி
சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்காக புதிய விளம்பரத்தை உருவாக்கி உள்ளது. இந்தியில் உருவாக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் நடிகர் ஜான் ஆபிரஹாமும், மல்யுத்த சூப்பர் ஸ்டார் எனப்படும் ட்ரூ மெக்கின்டயரும் இடம்பெற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான விளம்பரத்தில், ட்ரூ மெக்கின்டயருடன் நடிகர் கார்த்தி இணைந்து நடித்துள்ளார். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுகமான நினைவு
இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறியிருப்பதாவது; “பிரபலமான மல்யுத்த நிகழ்வுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த விளம்பரத்துக்காக ட்ரூவுக்கு தமிழ் உரையாடல்களைக் கற்றுக்கொடுத்தது, பிடித்த மல்யுத்த வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விஷயங்கள் குறித்து பேசியது சுகமான நினைவுகள்” என்று தெரிவித்துள்ளார்.