கோவை அருகே ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கஞ்சா செடி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பசுமணி கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் பலர், அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பயிர்களுக்கு இடையே ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிந்தது.

பறிமுதல்

இதுதொடர்பாக விசாரணை செய்தபோது கஞ்சா செடிகளை பயிரிட்டது பசுமணி கிராமத்தில் வசிக்கும் செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அங்கு பயிரிடப்பட்டிருந்த 15 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்த அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா செடிகளை பார்வையிட்டு, அக்கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு போதைப்பொருளான கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here