நடிகர் விஜய்சேதுபதியின் மிகப்பெரிய ரசிகையான தான் அவருடன் படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

வளரும் நடிகை

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதுடன், சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார்.

ஆசை

தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி கபூர், தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் நடிப்பது குறித்து ஜான்வி பேசியுள்ளார். தான் நடிகர் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவர் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here