தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அவர், அதைதொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களையும் பகிர்ந்து வந்தார். சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here