நஷ்டம் ஏற்பட்டாலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
நஷ்டம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் நேர மில்லா நேரத்தில் நிலைக் குழு தலைவர் (கணக்கு) தனசேகரன் பேசினார். அப்போது, அம்மா உணவகம் நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு இதுவரை ரூ.786 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில அம்மா உணவகங்களில் மிக குறைந்த அளவில் விற்பனையாகிறது. ரூ.500-க்கு குறைவாக விற்பனையாகக் கூடிய அம்மா உணவகங்களை மூடி விடலாம் எனத் தெரிவித்தார். 
மேயர் உறுதி
இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்தார். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அதை குறிப்பிட்டால், அவை ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்தப்படும் என்றும் அம்மா உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகிறேதா அது போலவே செயல்படும் எனவும் கூறினார். ஊழியர்கள் தேவைப்பட்டால் அந்த பகுதி கவுன்சிலர்களே நியமித்துக் கொள்ளலாம் எனவும் பிரியா தெரிவித்தார்.















































