சிறு வயதில் தான் அனுபவித்த துன்பங்கள் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
ஹிட் படங்கள்
கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’, ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிஸி நடிகை
‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கியுள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக பு’ஷ்பா’ படத்தின் 2-ம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.
எமோஷனல்
இந்த நிலையில், ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ராஷ்மிகா மந்தனா, சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; “சிறுவயதில் எனது பெற்றோரிடம் பணம் இருக்காது, குடும்பத்தில் அவ்ளோ கஷ்டம் இருக்கும். இரு மாதங்களுக்கு ஒரு வீடு மாறும் அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் பெற்றோர் என்னை வளர்த்தனர். ஒரு பொம்மை வாங்க கூட எங்களிடம் காசு இருக்காது. அதற்காக நான் மிகவும் ஏங்கி இருக்கிறேன்”. இவ்வாறு நடிகை ராஷ்மிகா மந்தா தெரிவித்துள்ளார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து, பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.