கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் மழை
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 14 செ.மூ., சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் தலா 12 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்குகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.