தமிழில் காலா, வலிமை படங்களில் நடித்த நடிகை ஹீமா குரேஷியின் காதல் முறிந்துவிட்டதாக இந்தி திரையுலகில் தகவல் பரவி வருகிறது.
முன்னணி நடிகை
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், தற்போது டபுள் எக்ஸ்எல், டர்லா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டபுள் எக்ஸ்எல் படத்தை முடாசர் அஜிஸ் என்பவருடன் இணைந்து ஹூமா குரேஷி தயாரித்து இருந்தார்.
காதல் முறிவு?
ஹூமா குரோஷிக்கும், முடாசருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் தற்போது முடாசர் அஜிசுடனான காதலை ஹூமா குரேஷி முறித்துவிட்டதாக இந்தி திரையுலகில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் தொடந்து நண்பர்களாக இருந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முடாசர் ஏற்கனவே நடிகை சுஷ்மிதாவை காதலித்து 2010-ல் அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.