பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.
பிஸி நடிகை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அவர், அதைதொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, சிம்புவின் பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அறிமுகம்
தற்போது தெலுங்கு படத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளார் பிரியா பவானி சங்கர். பென்குயின் படத்தின் இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் இயக்கத்தில், சத்யதேவ் நடிக்கும் 26-வது படத்தில் அவர் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சரண் ராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.















































