‘தாலி’ எனும் வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகை
தமிழில் ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்தவர் சுஷ்மிதா சென். அதன்பிறகு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் அவர் வருகிறார். 46 வயதாகினும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதா, 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
திருநங்கை
சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுப்பவருமான கவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘தாலி’ எனும் வெப் தொடர் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கும் இந்த வெப் தொடரில், நடிகை சுஷ்மிதா சென் திருநங்கையாக நடித்து வருகிறார்.
இதுவே பெருமை
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சுஷ்மிதா சென், “இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னை பெருமையுடனும் நன்றியுடனும் இருக்க செய்யவில்லை. வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.