தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை ரம்யா ஆறு வருட இடைவெளிக்கு பிறகு மீன்டும் சினிமாவில் ரீஎன்டரி கொடுக்கிறார்.
முன்னணி நடிகை
சிம்பு நடிப்பில் வெளியான ‘குத்து’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா. அதன்பிறகு குத்து ரம்யா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர், அர்ஜூனுடன் ‘கிரி’, சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷூடன் ‘பொல்லாதவன்’, ஜீவாவுடன் ‘சிங்கம் புலி’ ஆகிய படங்களில் நடித்தார். 2016-ல் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் முதல்முதலாக கன்னடத்தில் இயக்கிய ‘நகரஹவு’ என்கிற படத்தில் நாயகியாக நடித்தார். 
ரீஎன்டரி
கர்நாடக மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா, 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். பின்னர் பெரிய அளவில் படங்களில் அவர் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில், மீண்டும் அவர் படங்களில் நடிக்க திரும்பியுள்ளார். ராஜ் பி.ஷெட்டி இயக்கும் ‘சுவாதி முத்தின மலஹனியே’ என்ற படத்தில் ரம்யா நடிக்கிறார். மேலும் அப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவராகவும் அவர் இணைந்துள்ளார்.















































