சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிரடி உயர்வு

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.560 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒருகிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.4,775க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வீழ்ச்சி

இதேபோல், வெள்ளி கிலோவுக்கு ரூ.4,200 அதிகரித்து ரூ.66,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70 விற்கப்பட்டு வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here