பாலிவுட் ரீமேக்கில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஹிட் படம்
கடந்த 2017-ம் அண்டு தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது ‘விக்ரம் வேதா’ திரைப்படம். புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். மேலும் ராதிகா ஆப்தே, ரோஹித் சரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தடுமாற்றம்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரிலீஸான நாளில் ‘விக்ரம் வேதா’ திரைப்படமும் ரிலீஸானது. இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 4 நாட்களில் 40 கோடி ரூபாய்தான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.















































