நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார். இவர் சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அதனுடன் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அந்த பதிவில், மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லுவாங்க.. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடச்சா.. எனக் குறிப்பிட்டுள்ளார். மகாலட்சுமி அரசி, தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here