தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது மலையாள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகை

17 வருடங்களாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததுடன், பாகுபலி போன்ற பல மெகா ஹிட்டான படங்களையும் கொடுத்துள்ளார். 17 வருட சினிமா பயணத்தில், ஏராளமான ரசிகர்களை அவர் தன் வசம் வைத்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் என்ட்ரி

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்ளி பவுன்சர்’ திரைப்படம் செப்டம்பர் 23-ம் தேதி நேரடியாக Disney+ Hotstar OTT தளத்தில் வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை தமன்னா முதல்முறையாக மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி அருண் கோபி இயக்கத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here