உலகம் முழுவதும் வெள்ளித் திரையில் தோன்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த KGF-2 திரைப்படம் சின்னத்திரையிலும் மக்களை மகிழ்விக்க உள்ளது. 
சூப்பர் ஹிட் படம்
கன்னடத்தில் எடுக்கப்பட்ட KGF திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, KGF-2 உருவானது. KGF-2 திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ரிலீஸானது.
வசூல் சாதனை
இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரைகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை ரூ. 1,200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்துக்கான ஒரு சிறு முன்னோட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் KGF-2 திரைப்படம் தற்போது Zee Tamil தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.















































