வெளிநாட்டு பயிற்சியாளர்களை கொண்டு நடிகை சமந்தா தற்காப்பு கலைகளை கற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகை

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இளம் ஹீரோக்கள் முதல் முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர், தனது அழகான சிரிப்பாலும், எதார்த்தமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அண்மையில் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தார் சமந்தா. அதனைதொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படமும் இவரின் பங்களிப்பால் வெற்றி பெற்றது.

தற்காப்பு கலை

தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் சமந்தா அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இதேபோல் ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் அவர் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் இந்தி வெப்சீரிஸில் நடிக்க சம்ந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சமந்தாவுக்கு சண்டைக்காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளுமாறு படக்குழு அறிவுறுத்தியிருக்கிறது. இதையடுத்து சமந்தாவும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வந்துள்ள தற்காப்பு கலைஞர்கள், மும்பையில் பயிற்சி அளித்து வருகின்றனர். கராத்தே, குத்துச்சண்டை போன்ற கலைகளை கற்கும் சமந்தா, பயிற்சி முடிந்ததும் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here