வாரிசு அந்தஸ்திற்கு மாறாக திறமை மட்டுமே கை கொடுக்கும் என தன்னை விமர்சிப்பவர்களுக்கு நடிகை அதிதி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

திறமையான நடிப்பு

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். ‘விருமன்’ படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அதிதி, இதன்மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திலடி

இந்த நிலையில், இயக்குநர் சங்கரின் மகள் என்பதாலேயே அதிதிக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்”. இவ்வாறு அதிதி சங்கர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலரின் ஆதரவு கிடைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here