நட்சத்திர ஜோடிகளான நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், சில மாதங்களுக்கு முன்பு தங்களது திருமண வாழ்வை முறித்துக் கொண்டனர். இருவரும் பிரிவதாக தங்களுடைய விவாகரத்து செய்தியை வெளியிட்டனர். சமீபத்திய நிகழ்ச்சியில் கூட நாக சைதன்யாவை முன்னாள் கணவர் என சமந்தா குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நாக சைதன்யா. இதுதொடர்பாக அவர் கூறியதாவது; விவாகரத்துக்கு பின்னான காலகட்டத்தில் நான் ஒரு மனிதனாக நிறைய மாறி இருக்கிறேன். ஆரம்பத்தில் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ஆனால் இப்போது நான் தயாராக இருக்கிறேன். இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நான் உணர்வுபூர்வமாக நெருக்கமாக இருக்கிறேன். புது மனிதனாக என்னை நான் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.